search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த"

    • வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.

    அர்ப்பணிப்பு

    இந்நிலையில் இப்பள்ளிக்கு நியமிக் கப்பட்ட தலைமை யாசிரியர் ஸ்ரீதர், இடைநிலை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சி, அர்ப்பணிப்பு கல்விப் பணியால், மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குனர் கோபால்சாமி இப்பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க உதவினார். கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், தன்னார்வ லர்கள் ஒத்துழைப்பால் பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றது.

    சிறந்த தொடக்கப் பள்ளி விருது

    இப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து 2022- 2023- ம் ஆண்டிற்கான தமிழக பள்ளி கல்வித்துறை வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி விருதுக்கு காளியம்மன் புதூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்க உள்ளார். இவ்விருதை பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

    அரசு வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெறும் காளியம்மன் புதூர் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ், துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா மற்றும் கிராம மக்கள், பெற்றோர்கள், தன்னார்வ லர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×