search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட விரோத பணப்பரிவர்த்தனை"

    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை வாங்கியதிலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முன்ஜாமீன் பெற்று இருந்தார். அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க வேண்டும், அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது என்பது போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய கோரியும், வெளிநாடு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 3-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே வெளிநாட்டில் சட்ட விரோத சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக வதேராவுக்கு அமலாக்கத்துறை நேற்று புதிய சம்மனை அனுப்பி இருந்தது. இன்று ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை10.30 மணியளவில் ராபர்ட் வதேரா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    முன்னதாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நீதித்துறையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் இதுவரை 11 முறை ஆஜராகி இருக்கிறேன். 70 மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. எதிர்காலத்திலும் நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ளது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

    இவ்வாறு வதேரா கூறியுள்ளார்.
    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா நாளை ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை சட்ட விரோதமாக வாங்கியதிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு வதேரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று இருந்தார். வதேராவுக்கு ஏற்கனவே பல முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஆஜராகாமல் இருந்தார்.


    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மனை இன்று அனுப்பியது.

    நாளை காலை10.30 மணிக்கு இணைப்பு விசாரணைக்கு ஆஜராகுமறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
    சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவிடம் 5 நாளில் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #ED
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.

    லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.

    சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் அமலாக்கத்துறை வழங்க கோரி ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



    இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED
    சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra
    புதுடெல்லி:

    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    ஸ்லைலைட் ஹாஸ்பிடா லிட்டி எனும் நிறுவனத்தையும் வதேரா நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக அவரது தாயார் மவுரீன் வதேராவும் இருக்கிறார்.

    இந்த நிறுவனம் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் அரசு நிலம் வாங்கப்பட்டது. அதில் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தலைவர்களை பயன்படுத்தி முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்தபோது ராஜஸ்தான் ஐகோர்ட்டு அதற்கு தடை விதித்தது.

    நேற்று இந்த தடையை ராஜஸ்தான் ஐகோர்ட்டு விலக்கியது. மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    விசாரணைக்கு வரும் ராபர்ட் வதேராவை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    எனவே வருகிற 12-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜர் ஆவார் என்று தெரிகிறது. இதனால் அரசு நிலத்தை காங்கிரஸ் செல்வாக்கை பயன்படுத்தி ராபர்ட் வதேரா முறைகேடு செய்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. #RobertVadra
    ×