என் மலர்

  செய்திகள்

  சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு- வதேராவிடம் ஆவணங்களை 5 நாளில் வழங்க உத்தரவு
  X

  சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு- வதேராவிடம் ஆவணங்களை 5 நாளில் வழங்க உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவிடம் 5 நாளில் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #ED
  புதுடெல்லி:

  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.

  லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.

  சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

  இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் அமலாக்கத்துறை வழங்க கோரி ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

  இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED
  Next Story
  ×