search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை பெண்"

    • நான் மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன்.
    • பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வரும் கிருத்திகாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

    கோவை:

    மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து, கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று.

    கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தினமும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பி வருகிறார்.

    கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி. அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இவர் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று பிரதமர் மோடிக்கு முதல் கடிதம் எழுதினார். அதில் சமையல் எரிவாயு விலை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினார்.

    2-வதாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் கோரி மனு எழுதியிருந்தார்.

    தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தல், நிர்பயா அமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அதிகமாகதருவது, பி.எஸ்.என்.எல் 5 ஜி சேவை நிறுவுவது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது தொடங்கி தற்போது நடந்த இஸ்ரேல்-காசா போர் வரை கிருத்திகா கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

    கடந்த மார்ச் 8-ந் தேதியில் இருந்து இதுவரை 264 கோரிக்கை மனுக்களை எழுதி பிரதமருக்கு அனுப்பியுள்ளார். சட்டநாளான நேற்று தனது 264-வது கடிதத்தை எழுதினார்.

    இதில் இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையில் கடமைகள் தெரியப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வவை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை கடிதமாக எழுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ளார்.

    நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி தொடர்ந்து இவர் எழுதி வரும் கடிதத்திற்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து அக்னாலேஜ்மண்டு தருகின்றனர். தினமும் காலை 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து, அவரது மனு குறித்து விவாதிக்கின்றனர்.

    என் கணவர் உள்பட குடும்பத்தார் அனைவரும் எனக்கு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அவர்களின் ஆதரவு காரணமாக நான் மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன்.

    அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை நான் தெரிவித்தாலும், அக்கோரிக்கையானது நிறைவேறும் போது, அதில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதாக நினைத்து மன நிறைவடைகிறேன்.

    பெரியார், அம்பேத்கர், மார்கஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்து அறிந்து இருப்பதால், பொதுமக்களின் நலன் சார்ந்து நாள்தோறும் இந்த கடித போக்குவரத்து பணியை தொடர இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வரும் கிருத்திகாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளின் கொட்டம் சற்று குறைந்தது. ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது குறைந்திருந்தது.
    • வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தனது இடத்திற்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார்.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 13-ந்தேதி லட்சுமி கார்டனை சேர்ந்த கோகுல் என்பவரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் தலைமையில் ஒரு குழுவும், ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் தலைமையிலான ஒரு குழுவும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராமை, கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த கொலைக்கு பழிவாங்கவே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதவிர இந்த 2 குழுவினரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டும் மோதிக்கொண்டனர். குரங்கு ஸ்ரீராம் இறந்த பிறகு, நண்பரின் மரணத்துக்கு விரைவில் பழி தீர்க்கப்படும் எனவும் பதிவிட்டு வந்துள்ளனர்.

    மேலும் இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, பட்டாக்கத்தி, அரிவாள் வைத்து நடந்து வருவது போலவும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அதிலும் உச்சமாக அவர்களுடன் இளம்பெண் ஒருவர் கையில் கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடந்து வருவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக பிரகா பிரதர்ஸ் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான வீடியோக்கள் இருந்தன.

    இதையடுத்து போலீசார் வீடியோக்கள் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்று வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளின் கொட்டம் சற்று குறைந்தது. ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது குறைந்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதையடுத்து போலீசார் அந்த வீடியோ எந்த சமூக வலைதளத்தில் இருந்து வந்தது என விசாரித்த போது அது பிரண்ட்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அவர் யார் என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா(வயது23) என்பதும், கோவை காளப்பட்டியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    வினோதினி நர்சிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவை காளப்பட்டியில் தனது ஆண் நண்பரான சூர்யா என்ற சூர்ய பிரகாசுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அதில் வந்த பணத்தை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    மேலும் வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தனது இடத்திற்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார். அதேபோல இதுபோன்ற வீடியோக்களையும் வெளியிட்டு, 2 குழுக்களுக்கு இடையே பகையை உருவாக்கவும் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வினோதினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் தனிப்படையினர் இன்று திருப்பூர் விரைந்துள்ளனர். திருப்பூரில் முகாமிட்டு அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து அந்த மாவட்ட போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தென் இந்திய அழகிப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு 14 போட்டியாளர்கள் தேர்வானார்கள்.
    • சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

    கோவை:

    கொச்சியில் திருணமான பெண்களுக்கான திருமதி தென் இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது.

    கோவை, கேரள மாநிலம் கொச்சியில் பேகாசஸ் குளோபல் நிறுவனம் சார்பில் திருணமான பெண்களுக்கான திருமதி தென்இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிக்கு தென் இந்திய மாநிலங்களில் இருந்து பல்வேறு திருமணமான பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களில் இறுதிச்சுற்றுக்கு 14 போட்டியாளர்கள் தேர்வானார்கள். அதில் கோவை சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தை சேர்ந்த ஷாலு ராஜ் (வயது 30) என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து நடந்த திருமதி தென் இந்திய அழகி போட்டியில் ஷாலு ராஜ் 2-வது இடத்தையும், திருமதி தமிழ்நாடு அழகி போட்டியில் முதலிடம் பிடித்து திருமதி தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார். மேலும் அவர் பன்முக ஆளுமை திறன் கொண்டதற்காக திருமதி நல்ல உடல் கட்டமைப்பு, திருமதி திறமைசாலி, திருமதி நம்பிக்கைக்குாியவர் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது.

    இதுகுறித்து ஷாலு ராஜ் கூறும்போது, சொந்தமாக காபி ஷாப் நடத்தி வருகிறேன். எனது காபி ஷாப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை பணியாளராக நியமித்து அவர்களின் வாழ்விற்கு வழிவகுத்து வருகிறேன். எனது கணவர் ராஜ்சிவானந்தம். எனக்கு 4 வயதில் ஆரின் ஆதியா என்ற மகன் உள்ளான். திருமணமான பெண்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் திருமதி அழகிப்போட்டியில் பங்கேற்றேன். அதில் வெற்றி பெற்று சாதித்து உள்ளேன். எனது குடும்பத்தினர் மிகவும் ஒத்துழைப்பு வழங்கினா் என்றார்.

    ×