search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை அட்டை"

    • விருதுநகர் அருகே கோரிக்கை அட்டை அணிந்து அமைச்சு பணியாளர்கள் பணியாற்றினர்.
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் இந்த போராட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் உள்ள 11-வது பட்டாலியனில் பணியாற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

    புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்புரம் காவல் ஆணையரகம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

    காவல்துறை குடியிருப்புகளில் அமைச்சு பணியாளர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19, 20, 21-ந்தேதி ஆகிய 3நாட்கள் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடந்தது.

    நேற்று 11-வது பட்டாலியனில் கிளை தலைவர் கண்காணிப்பாளர் பாலா, செயலாளர் முருகானந்தம் தலைமையில் 35அமைச்சு பணியாளர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

    • கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் பணிபுரிந்தனர்.
    • அரசு மருத்துவமனையில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழக அரசு ஆணை எண்.354-ஐ உடனடியாக மறுஆய்வு செய்திட வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். டாக்டர்களுக்கான சேமநலநிதியை (டி.சி.எப்.) விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள அரசாணை எண்.225-ஐ ரத்து செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தோம் என்றனர்.

    ×