search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கை ரேகை"

    ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. #RationCard #SmartCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    தற்போது 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் பெருமளவு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஸ்மார்ட் கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து ரே‌ஷன் பொருட்களை சிலர் வாங்கி வருகின்றனர்.

    வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் கார்டை கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். இதனால் அரசின் மானியம் வீணாகிறது.

    இதை தடுப்பதற்காக ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை கமி‌ஷனர் மதுமதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பொது வினியோக திட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உரிய நபருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


    தற்போது ‘ஸ்மார்ட் கார்டு’ நடைமுறைக்கு வந்த பிறகு பெருமளவு முறைகேடுகள் குறைந்து விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக குடும்ப உறுப்பினர்கள் ரே‌ஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலையை கொண்டு வர உள்ளோம்.

    ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டை பதிவு செய்யும் மிஷினுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான மிஷினும் கூடுதலாக வைக்கப்பட உள்ளது.

    அதில் குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும் போதும் கைரேகை வைக்க வேண்டும்.

    இந்த நடைமுறை இன்னும் 3 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக கைவிரல் ரேகையை பதிவு செய்யும் மிஷின் ரே‌ஷன் கடைகளில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RationCard #SmartCard
    ×