search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேடிஎம் இந்தியா"

    • கேடிஎம் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
    • இந்திய சந்தையில் கேடிஎம் இந்தியா வாகனங்களின் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோ மேற்கொண்டு வருகிறது.

    ஆஸ்த்ரியாவை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளர் கேடிஎம் இந்தியாவில் வாகனங்கள் உற்பத்தியில் பத்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்டு இருக்கிறது. பத்து லட்சமாவது கேடிஎம் மோட்டார்சைக்கிள் யூனிட் பூனே அருகில் செயல்பட்டு வரும் சக்கன் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    கேடிஎம் உற்பத்தி செய்த பத்து லட்சமாவது யூனிட் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள கேடிஎம் இந்தியா நிறுவனம் பஜாஜ் ஆட்டோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    2014 ஆம் ஆண்டு வாக்கில் கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது ஒரு லட்சமாவது யூனிட்டை வெளியிட்டது. 2020 ஆண்டு வாக்கில் தனது ஐந்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்ட கேடிஎம் இரண்டவாது ஐந்து லட்சம் வாகனங்களை மூன்றே ஆண்டுகளில் உற்பத்தி செய்து அசத்தி இருக்கிறது.

    2011 ஆம் ஆண்டு கேடிஎம் இந்தியா முதல் மோட்டார்சைக்கிள் சக்கன் ஆலையில் இருந்து வெளியானது. அப்போது பஜாஜ் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கேடிஎம் மோட்டார்சைக்கிள்கள் வெளிநாட்டுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை எதுவும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவே இல்லை.

    உற்பத்தி துவங்கிய ஒரு வருடம் கழித்து கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கியது. 2012 ஆம் ஆண்டு வாக்கில் டியூக் 200 மாடலை கேடிஎம் அறிமுகம் செய்தது. கேடிஎம் டியூக் 200 வெற்றியை தொடர்ந்து கேடிஎம் நிறுவனம் தனது RC சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை 2014 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் 2020 வாக்கில் அட்வென்ச்சர் சீரிசை அறிமுகம் செய்தது.

    இதுதவிர கேடிஎம் நிறுவனம் வெவ்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்தும் வகையில் நான்கு வெவ்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது. 125சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜினுடன் 200சிசி, 250சிசி மற்றும் 373சிசி என்ஜின் கொண்ட மாடல்களை கேடிஎம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    ×