search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேங்ஸ்டர் ஆதிக் அகமது"

    • போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகன் ஆசாத்தின் உடலை நேற்று முன்தினம் அங்குதான் அடக்கம் செய்தனர்.
    • அடக்கம் செய்வதகாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, பிரயாக்ராஜ் அருகே உள்ள கசாரி மசாரி சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    ஆம்புலன்சில் வயதான குடும்ப உறுப்பினர் ஒருவர் உடன் சென்றார். அந்த சுடுகாடு, ஆதிக் அகமதுவின் மூதாதையர் கிராமத்தில் உள்ளது. அவரது பெற்றோரை அங்குதான் அடக்கம் செய்துள்ளனர். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகன் ஆசாத்தின் உடலை நேற்று முன்தினம் அங்குதான் அடக்கம் செய்தனர்.

    அதே சுடுகாட்டில், ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூரத்து உறவினர்கள் சிலரும், உள்ளூர் மக்களும் மட்டும் மயானத்துக்குள் காணப்பட்டனர்.




    • மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தல்.
    • உ.பியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

    முன்னாள் எம்.பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

    இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதன் எதிரொலியால், உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

    • உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
    • சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்த சூழலில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

    இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யின் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.
    • ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தவர் ஆதிக் அகமது. கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏவின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச கேங்ஸ்டராக கருதப்படும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருவரும் அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அன்று மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    இந்நிலையில், இன்று நிருபர்களுக்கு இருவரும் போலீசாரின் முன்னிலையில் பேட்டி அளித்துக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக, தாங்கள் என்கவுன்டரில் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டிய ஆதிக் தனது குடும்பத்தை காப்பாற்றுமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யின் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட கும்பலின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ராகூறுகையில், "மக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர்" என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ×