search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டாளிகள் கைது"

    • மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
    • கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கூடப்பாக்கம் தச்சு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது50). இவர் கூடப்பாக்கம் மந்தைவெளியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தபோது 19 வயது இளம்பெண் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்பது போல் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவருடன் வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதன்பிறகு கருணாகரனிடம், ஒருநாள் உங்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    அதன்படி இருவரும் வில்லியனூர் கணுவாப்பேட்டை சுடுகாடு அருகே புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றபோது, ஏற்கனவே இருட்டில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் திடீரென டார்ச் லைட் அடித்து எங்கும் ஓடக்கூடாது என மிரட்டி அந்த கோலத்திலேயே படம் எடுத்துள்ளனர்.

    பிறகு அந்த பெண்ணின் பெயரை கூறி ஆடைகளை உடுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது தான் இவர்கள் திட்டம் போட்டு பணம் பறிக்க அழைத்து வந்தது கருணாகரனுக்கு தெரியவந்தது.

    இதனிடையே அந்த கும்பல் கருணாகரனிடம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோவை இணைய தளத்தில் போட்டு விடுவோம். குடும்பத்திலும் காட்டி அவமானப்படுத்துவோம் என மிரட்டியுள்ளனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இன்னும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதால் உடனே கருணாகரன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.50ஆயிரத்தை ஜிபே மூலம் கொடுத்துள்ளார்.

    ஆனாலும் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியதால் கருணாகரன் அவரது நண்பர் கடையில் இருந்து ரூ.30 ஆயிரத்தை வாங்கி கொடுத்தார்.

    மொத்தமாக ரூ.1.25 லட்சத்தை வாங்கி கொண்டு, செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட்டதாக கூறிவிட்டு அந்த வாலிபர்களும், இளம்பெண்ணும் சென்று விட்டனர்.

    இதுகுறித்து கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த ராமு, பிரகாஷ், அருண்குமார் மற்றும் ராமு மனைவியின் தோழி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமு, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுக்கு பணம் தேவைப்பட்டதால் ராமு மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து இத்திட்டத்தை போட்டதும், கருணாகரனை கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் காட்டி இவரிடம் அதிக பணம் உள்ளது என்று கூறி சிக்க வைத்ததும் தெரியவந்தது.

    மேலும், இவர்கள் ஏற்கனவே மங்கலம் பகுதியில் ஒருவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்து சென்று வீடியோ எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளம்பெண், அருண்குமாரை தேடி வருகின்றனர்.

    • நெய்வேலியில் ரவுடி வெட்டிக்கொன்ற கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    • வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் 30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது43.). பிரபல ரவுடியான வீரமணி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நேற்று அதிகாலை வீரமணியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அவர் தாய் மற்றும் அவர் உறவினர்கள் வீரமணி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நெய்வேலி  போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன், நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பென்டர் லதா மற்றும் போலீசார் வீரமணி படுகொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரவுடி வீரமணியின் கூட்டாளிகள் சேர்ந்து இந்த கொலையை செய்து உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக நெய்வேலி டவுன் ஷிப் வட்டம் 21- ஐ சேர்ந்த குணசீலன், மகேஷ்குமார், சந்திரசேகர், பார்த்திபன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×