search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் நேரம்"

    • பாட்னா மற்றும் ஷாலிமர் செல்லும் வாராந்திர ரெயில்கள், கோவையில் இரண்டு நிமிடம் கூடுதலாக நிறுத்தப்படுகிறது.
    • 600க்கும் அதிகமான வடமாநில பயணிகள் திருப்பூர் வந்திறங்குகின்றனர்.

    திருப்பூர் :

    பாட்னா மற்றும் ஷாலிமர் செல்லும் வாராந்திர ரெயில்கள், கோவையில் இரண்டு நிமிடம் கூடுதலாக நிறுத்தப்படுகிறது.திருப்பூரிலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் கூடுதலாக நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும்,மே ற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. பாட்னா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ஆகிய இந்த ெரயில்கள் கோவையில், காலை 10:27மணிக்கு வந்து 10:30 மணிக்கு புறப்பட்டு வந்தது. ரெயில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக இரண்டு நிமிடங்கள் அதாவது காலை 10:25மணிக்கு வரும் ரெயில்கள் 10:30 மணி வரை கோவையில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் இந்த ரெயில்கள் காலை 9:28மணிக்கு வந்து 9:30 மணிக்கு புறப்படும். இரண்டும் வாராந்திர ரெயில் என்பதால், வடமாநிலங்களில் இருந்து 600க்கும் அதிகமான வடமாநில பயணிகள் திருப்பூர் வந்திறங்கு கின்றனர். ரெயில்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பயணிகள்.

    ×