search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குர்திஷ் போராளிகள்"

    சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். #Trump #SyrianKurds
    வாஷிங்டன்:

    சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுக்கு உதவ அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றன.

    அதன்பின்னர் அமெரிக்க படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். அமெரிக்க படைகள் வருகைக்கு பிறகு அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்தனர்.

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். அதன்படி சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறி வருகிறார்கள்.



    இதற்கிடையே தாங்கள் பயங்கரவாதக் குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடங்க உள்ளதாக அண்டை நாடான துருக்கி அறிவித்தது. இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

    சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக துருக்கி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என்றும், 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயம், துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் குர்துக்கள் நடந்துகொள்வதை விரும்பவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என தெரிகிறது. #Trump #SyrianKurds
    ஈராக் நாட்டின் வடபகுதி மற்றும் துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.
    இஸ்தான்புல்:

    ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

    இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள சாப் மாகாணம் மற்றும் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிர்னாக் மற்றும் வான் பகுதிகளில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
    ஈராக் நாட்டின் வடபகுதியில் துருக்கி விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 குர்திஷ் போராளிகள் உயிரிழந்தனர். #Turkishairstrikes #Kurdishmilitantskilled
    இஸ்தான்புல்:

    ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

    இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப் படைகள் ஈடுபட்டுள்ளன. 

    இந்நிலையில், குர்திஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முகாம்கள் அமைத்து தங்கியுள்ள வடக்கு ஈராக்கில் துருக்கி விமானப் படையினர் நேற்று வான் தாக்குதல் நடத்தினர். இதில், சுமார் 15 குர்திஷ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என டுவிட்டர் மூலம் துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. #Turkishairstrikes #Kurdishmilitantskilled
    ஈராக் நாட்டின் வடபகுதி மற்றும் துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் உயிரிழந்தனர். #Turkishairstrikes #Kurdishmilitantskilled
    இஸ்தான்புல்:

    ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

    இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், குர்திஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முகாம்கள் அமைத்து தங்கியுள்ள, தென்கிழக்கு துருக்கியின் தியார்பகிர், சிர்னாக் மாகாணங்கள் மற்றும் வடக்கு ஈராக்கின் அவாசின் - பாஸ்யான் பகுதிகளில் துருக்கி விமானப்படையினர் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் வான் தாக்குதல் நடத்தினர்.

    இதில், சுமார் 26 குர்திஷ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என டுவிட்டர் மூலம் துருக்கி ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், பயங்கரவாதிகளின் முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் மற்றும் வெடிமருந்துகளும் இந்த தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
    #Turkishairstrikes #Kurdishmilitantskilled
    ×