search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பப்பூ சாகுபடி"

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.
    • 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில், செப்.26-

    குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 21.50 அடியாக இருந்தது.

    அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 434 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் 634 கன அடி தண்ணீரும் சானல் களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. சானல்களிலும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதை யடுத்து விவசாயிகள் சாகு படி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம் பகுதிகளில் ஏற்கனவே நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை யடுத்து அவர்களுக்கு தேவை யான விதை நெல் களை தங்குதடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகு படி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • உரிய ஆவணங்களுடன் அதற்குரிய காப்பீடு கட்டணம் செலுத்தினால் பயன்பெறலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவத்தில் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான நெல் விதைகள் வேளாண்மை துறை மூலம் வினியோகம் செய்திட 80 மெட்ரிக் டன் இலக்காக பெறப்பட்டது. இதற்கு தேவையான விதைகள் அரசு விதைப்பண்ணை, திருப்பதிசாரம் மற்றும் உதவி விதை அலுவலர்க ளால் விவசாயிகளின் வயலில் விதைப்பண்ைண அமைக்கப்பட்டு 114 மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 92 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு கும்பப்பூ பருவத்தில் சாகுபடி செய்வதற்காக வினியோகம் செய்யப் பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் தற்போது கும்பப்பூ பரு வத்தில் சாகுபடி செய்ய தேவையான விதைகளை பெற தங்கள் தாலுகா வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும், மேலும் அடுத்த ஆண்டு கன்னிப்பூ பருவத்திற்கு விவசா யிகளுக்கு தேவையான விதைகளை வினியோகம் செய்ய 102 எம்.டி. இலக்காக பெறப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான விதை களை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு கன்னிப்பூ பரு வத்தில் 110 ஏக்கர் பரப்பிற்கு அம்பை 16, டி.பி.எஸ்.- 5 மற்றும் பாரம்பரிய ரகங்க ளான பூங்கார், கருங்குறுவை ஆகிய ரகங்கள் அரசு விதைப்பண்ணை, திருப்பதி சாரம் மற்றும் உதவி விதை அலுவலர்களால் விவசாயி களின் வயலில் விதைப் பண்ணை அமைக்கப் பட்டுள்ளது.

    மேற்படி விதைப் பண்ணைகள் விதைச்சான்று துறையினரால் உரிய ஆய்வு மேற்கொண்டு சான்றளிக் கப்பட்டு ஆதாரம் மற்றும் சான்று விதைகளாக வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயி களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    மேலும் கும்பப்பூ பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்து அதனை காப்பீடு செய்ய உரிய ஆவணங்களுடன் அதற்குரிய காப்பீடு கட்டணம் செலுத்தினால் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×