search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமுறல்"

    • இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன.
    • விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது

    கடலூர்:

    கடலூர் பாரதி சாலையில் மிகவும் பிரபலமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்கா சுற்றி நடப்பதற்கு நடை பாதைகள் மற்றும் பூங்காவிற்குள் அனைவரும் இளைப்பாற மரங்கள் நடப்பட்டு உள்ளன.


    தற்போது இந்தபூங்காவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு பொருட்கள் உடைந்து உள்ளன. அதோடு நடைபாதைகளில் உள்ள கற்கள் முழுவதும் சிதைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றன.

    இது மட்டும் இன்றி பூங்காவில் உள்ள கட்டிடம் சிதலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் போது 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் கட்டணம் வசூலிப்பது ஏற்றவாறு உள்ளே எந்த வித வசதியும் ஏற்படுத்தவில்லை. அது மட்டும் இன்றி தினந் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பூங்கா விற்கு வந்து விளையாட்டுப் பொருட்களில் விளையாட செல்ல நேர்ந்தால் அங்கு உடைந்திருக்கும் விளையாட்டு பொருட்களால் சிறுவர்களின் உயிரை காவு வாங்குவதற்கு தயாராகவே விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டது போல் உள்ளது என பெற்றோர்கள் குமுறி வருகின்றனர்.

    இதற்காக விளையாட்டுப் பொருட்களில் விளையாடாமல் பூங்காவில் ஓடிப் பிடித்தும், கண்ணாம்பூச்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கட்டணம் செலுத்தி சிறுவர்கள் விளையாடுவதோடு உடைந்த விளையாட்டுப் பொருட்களில் பெற்றோர்களின் பாதுகாப்புடன் சிறிது நேரம் மனம் நொந்தபடி விளையாடி செல்வதை காண முடிந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் நடக்கும் போது அடிக்கடி கீழே விழுவதும், பெரியோர்களுக்கு மூட்டு வலி ஏற்படுவதும், விழுவதால் உடலில் காயம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது    இது தொடர்பாக அங்குள்ள நபர்களிடம் இது தொடர்பாக கேட்டால் 5 ரூபாய்க்கு இந்த வசதி தான் செய்ய முடியும். விருப்பம் இருந்தால் வரவும் இல்லை என்றால் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கறாராக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்  மேலும் கடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள கட்டண வசூலிக்கப்படும் பூங்காவில் அடிப்படை வசதிகளான சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், அனைவரும் நடந்து செல்லும் வகையிலான நடைபாதைகள் மற்றும் அவசர தேவைக்காக கழிவறை வசதி எதுவும் இல்லாமல் இது போன்ற பூங்காக்களால் ஏதேனும் சிறுவர்களுக்கு உயிர் பலி நேரிட்டால் இதற்கு யார் பதில் கூறுவார்கள்?  உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அதிகாரிகள் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காது? இதற்கான முழு நடவடிக்கை எடுப்போம் என வாசகங்களை அடுக்கிக் கொண்டு சொல்வதோடு அனைவரின் உயிரும் மிக முக்கியம் என கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பூங்காவை ஆய்வு செய்து இதற்கான நிரந்தர நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ஆனால் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என பொதுமக்கள் ஒருபுறம் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும் .

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

    • ரூ.20 வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
    • முதியவர்களிடமும் லஞ்சம் கேட்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி,

    தமிழகம் முழுவதும் முதியோர் உதவி தொகை பெறுவோருக்கு வருடம் தோறும் அரசு இலவசமாக வேட்டி , சேலைகள் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சுற்றியுள்ள சில கிராமங்களில் இந்த இலவச வேட்டி , சேலைகளை விநியோகிக்க ஒவ்வொருவரும் ரூ.20 வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இந்த பகுதிகளில் நேரடியாக வந்து விநியோகிப்பதால் ஏற்படும் பெட்ரோல் செலவுக்காக இந்த தொகையை வசூலிப்பதாக அதிகாரிகள் கூறுவதாக ஓய்வூதியம் பெறுவோர் குற்றம் சுமத்துகின்றனர்.

    இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நிரஞ்சன்குமாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அவர் தரப்பில் கூறியுள்ளதாவது:-

    இப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சுமார் 5,000 ஓய்வூதியம் பெறுவோருக்கு வேட்டி,சேலைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் இதுவரை 90 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வழங்க முடிந்தது.

    தற்போது மீதம் உள்ளவர்களுக்கு கிராம உதவியாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.20 பணம் கேட்கும் விவகாரம் தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அரசின் உதவி தொகையை வைத்து வாழ்க்கையை ஓட்டும் முதியவர்களிடமும் லஞ்சம் கேட்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×