search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மீனவர்கள்"

    • மத்திய மந்திரிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

    கன்னியாகுமரி, நவ.23-

    மத்திய மந்திரி ஜெய்சங்க ருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள் ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெதலீஸ் (வயது-51). இவரது தலைமையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் 17 பேரும் ஓமன் நாட்டில் உள்ள துக்கம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மஸ்கட் பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர். இவர்களுக்கு ஓமன் நாட்டு விசைப்படகு உரிமையாளர் கடந்த 3 மாத காலமாக ஊதியம் அளிக்கா மல் இருந்து வந்ததாக கூறப்பட்டுகிறது.

    மீனவர்கள் ஒமன் நாட்டில் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து அதனை ஒரு அரபி உரிமை யாளரிடம் ஒப்படைத்து அதற்குரிய சம்பளத்தை பெற்று வந்தனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த அரபி ஒவ்வொரு மாதமும் மீன்பிடித்ததற்குரிய சம்பளத்தை கொடுக்கும் போதெல்லாம் ஒரு தொகையை பிடித்தம் செய்துவிட்டு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பலமுறை சம்பள பிடித்தம் செய்யப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

    இதனால் பெதலீஸ் அந்த விசைப்படகு உரிமையா ளரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெதலீசை, விசைப்படகு உரிமையாளர் தரப்பினர் சட்ட விரோத மாக சிறைபிடித்து சென்ற தாக அவருடன் வேலைக்குச் சென்ற பிற மீனவர்கள் பெதலீஸ் மனைவி சோபா ராணிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள பிற மீனவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக உணவு பொருட்களையும் விசைபடகு உரிமையாளர் தரப்பில் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது.

    இதையடுத்து அவர் தனது கணவரை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதேபோல் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்ற மீனவர்களின் குடும்பத் தினரும் அதிகாரி களிடம் கோரிக்கை வைத்துள் ளார்கள்.குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

    உணவு அளிக்கப்படாமல் சித்ரவதைக்கு உள்ளாகி யிருக்கும் மற்ற மீனவர்களின் குடுமப்பத்தினரும் கவலை யில் ஆழ்ந்துள்ளனர். எனவே குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 மீனவர்களின் குடும்பத்தி னரும் அந்தந்த மாவட்டங் களில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது.
    • குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தூத்துறை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், புதுவை மாநிலம் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், கேரளா சேர்ந்த ஒருவர் உட்பட 12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது. இதில் அவர்களது விசைப்படகு நடுகடலில் மூழ்கியது. 12 மீனவர்களும் கடலிலே தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்ப டுத்திய இழுவை கப்பல் 12 மீனவர்களை மீட்டு மாலத்தீவு கொண்டு சேர்த்தது.

    மாலத்தீவு அதிகாரிகள் 12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக மாலத்தீவில் வைத்திருந்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று 12 இந்திய மீனவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

    பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து 12 மீனவர்களும் விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அங்கி ருந்து மீனவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர். வீடுகளுக்கு வந்த மீனவர்களை அவரது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பணி சர்ச்சில் நன்றி தெரிவித்துள்ளார்.

    • ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
    • கடல் கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து சவுதி அரேபியா கடலோர காவல் படையினருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ் குமார் (வயது 37).

    இவர், சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கபிலன், நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியை சேர்ந்த துரைராஜ் ஆகியோருடன் சவுதி அரேபியா நாட்டில் இருந்து விசைப்படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

    கத்திப் என்ற பகுதியில் இருந்து சவுதி அரேபியா நாட்டின் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலாளிக்கு சொந்தமான "ரஸ்மா அல் அவள்" என்ற விசைப்படகில் அவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். கடந்த 22-ந் தேதி 5 மீனவர்களும் ஆழ்கடலிலே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஈரான் கடல் கொள்ளையர்கள் திடீரென வந்தனர்.

    அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கினார்கள்.

    அப்போது கடல் கொள்ளையர்கள், மீனவர்களின் படகில் இருந்த மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ். எக்கோ சவுன்டர், வயர்லெஸ் மற்றும் மீனவர்களின் செல்போன்கள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    அவர்கள் சென்றபிறகு, பதுங்கியிருந்த மீனவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது தான் தங்களது உடமைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் மீனவர் ராஜேஷ் குமார் இடது கண்ணில் குண்டடிபட்டும், முகத்தின் காது, தொண்டை பகுதிகளில் காயங்களுடன் மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடல் கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து சவுதி அரேபியா கடலோர காவல் படையினருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டிலே அவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் குமாரை மீட்டு சவுதி அரேபியா நாட்டின் மவுசட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அறிந்து சவுதி அரேபியா நாட்டில் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களிலே மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு, கேரளாவை சார்ந்த இந்திய மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் கடந்த 9 நாட்களாக கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் உயிருக்கான பாதுகாப்பை சவுதி அரேபியா அரசு உறுதி செய்யும் வரை நாங்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இதற்கு முன்பும் கடற்கொள்ளையர்கள் சவுதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2000-மாவது ஆண்டு மகிமை என்ற குமரி மீனவரும், 2007-ம் ஆண்டு மணக்குடியை சார்ந்த பணி அடிமை என்ற மீனவரும் 2010-ம் ஆண்டு குறும்பனையை சேர்ந்த குமார் என்ற மீனவரும் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×