search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமன் நாட்டில் உணவு வழங்காமல் சித்திரவதை செய்யப்படும் குமரி மீனவர்கள் உள்பட 17 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    ஓமன் நாட்டில் உணவு வழங்காமல் சித்திரவதை செய்யப்படும் குமரி மீனவர்கள் உள்பட 17 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • மத்திய மந்திரிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

    கன்னியாகுமரி, நவ.23-

    மத்திய மந்திரி ஜெய்சங்க ருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள் ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெதலீஸ் (வயது-51). இவரது தலைமையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் 17 பேரும் ஓமன் நாட்டில் உள்ள துக்கம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மஸ்கட் பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர். இவர்களுக்கு ஓமன் நாட்டு விசைப்படகு உரிமையாளர் கடந்த 3 மாத காலமாக ஊதியம் அளிக்கா மல் இருந்து வந்ததாக கூறப்பட்டுகிறது.

    மீனவர்கள் ஒமன் நாட்டில் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து அதனை ஒரு அரபி உரிமை யாளரிடம் ஒப்படைத்து அதற்குரிய சம்பளத்தை பெற்று வந்தனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த அரபி ஒவ்வொரு மாதமும் மீன்பிடித்ததற்குரிய சம்பளத்தை கொடுக்கும் போதெல்லாம் ஒரு தொகையை பிடித்தம் செய்துவிட்டு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பலமுறை சம்பள பிடித்தம் செய்யப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

    இதனால் பெதலீஸ் அந்த விசைப்படகு உரிமையா ளரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெதலீசை, விசைப்படகு உரிமையாளர் தரப்பினர் சட்ட விரோத மாக சிறைபிடித்து சென்ற தாக அவருடன் வேலைக்குச் சென்ற பிற மீனவர்கள் பெதலீஸ் மனைவி சோபா ராணிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள பிற மீனவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக உணவு பொருட்களையும் விசைபடகு உரிமையாளர் தரப்பில் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது.

    இதையடுத்து அவர் தனது கணவரை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதேபோல் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்ற மீனவர்களின் குடும்பத் தினரும் அதிகாரி களிடம் கோரிக்கை வைத்துள் ளார்கள்.குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

    உணவு அளிக்கப்படாமல் சித்ரவதைக்கு உள்ளாகி யிருக்கும் மற்ற மீனவர்களின் குடுமப்பத்தினரும் கவலை யில் ஆழ்ந்துள்ளனர். எனவே குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 மீனவர்களின் குடும்பத்தி னரும் அந்தந்த மாவட்டங் களில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×