என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்"

    • கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
    • கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவிளக்குறிச்சி ராஜாமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கீதா (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி காலையில் வழக்கம் போல் சங்கீதா கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து சங்கர் இது தொடர்பாக பாடாலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.

    தவளக்குப்பத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் புதுவை கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுகன்யா (வயது21). இவர் பாக்குமுடையான்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம்போல் சுகன்யா கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் சுகன்யா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சுகன்யாவை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கும் சுகன்யா இல்லை.

    இதையடுத்து குணசேகரன் தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சுகன்யாவை தேடி வருகிறார்கள்.

    ×