search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் சாதனை"

    • மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.
    • கலாம் கல்லூரி மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    பேராவூரணி:

    கோயம்புத்தூர் யுனைடெட் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் டாக்டர் கலாம் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி மாணவ, மாண விகள் கலந்து கொண்டு ஆடவர்களுக்கான கபாடி போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மன் ஜெயசீலன்,நிர்வாக பிரதிநிதி அஜித் டேனியல், பார்மசி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர்கள் அன்பழகன், மதிவாணன் மற்றும் துணை முதல்வர் பரிமளா தேவி மற்றும் துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பிரசாத், பாலமுருகன் குழந்தைவேல், ஆசிகா மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் அலுவலக உதவி யாளர்கள், மாணவ, மாணவிகளும் பாராட்டு களை தெரி வித்தனர்.

    • வெற்றிப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கல்லூரி சார்பில் முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணைவேந்தர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

    தருமபுரி,

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2022- 23 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைவேந்தர் ஜெகநாதன் அவர்கள் தலைமை வகித்தார்.

    இதனையடுத்து ஹாக்கி, கால்பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றதற்கான வெற்றி கோப்பைகளையும், கையுந்துப் பந்து இரண்டாம் இடம் பெற்றதற்கான வெற்றி கோப்பையையும், இறகுப்பந்து மூன்றாம் இடம் பெற்றதற்கான வெற்றிக்கோப்பை உள்ளிட்ட கோப்பைகளைக் கல்லூரி சார்பில் முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணைவேந்தர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். வெற்றிப் பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சேவியர் டெனிஸ் ஆகியோரைக் கல்லூரிச் செயலர் ராபர்ட் ரமேஷ் பாபு, துணைமுதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்புராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    ×