என் மலர்
நீங்கள் தேடியது "College Students Achievement"
- மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.
- கலாம் கல்லூரி மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.
பேராவூரணி:
கோயம்புத்தூர் யுனைடெட் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் மாநில அளவி லான யுனைடெட் ஃபார்மா டிராபி போட்டிகள் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் டாக்டர் கலாம் காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி மாணவ, மாண விகள் கலந்து கொண்டு ஆடவர்களுக்கான கபாடி போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மன் ஜெயசீலன்,நிர்வாக பிரதிநிதி அஜித் டேனியல், பார்மசி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர்கள் அன்பழகன், மதிவாணன் மற்றும் துணை முதல்வர் பரிமளா தேவி மற்றும் துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் பிரசாத், பாலமுருகன் குழந்தைவேல், ஆசிகா மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் அலுவலக உதவி யாளர்கள், மாணவ, மாணவிகளும் பாராட்டு களை தெரி வித்தனர்.






