search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி பட்டமளிப்பு விழா"

    • 619 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். மொத்தம் 619 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதியார் பல்கலைகழக தேர்வுதுறை கட்டுப்பாட்டாளர் முனைவர் ஆர்.விஜயராகவன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கல்லூரி செயலர் ஆனி உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு
    • கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் விமல்சந்த் தலைமை தாங்கினார்.

    கல்லூரி செயலாளர் லிக்மிசந்த், நிர்வாக உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் இன்பவள்ளி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    முதன்மை சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ தலைவரும், பெங்களூர் விக்ரம்சாராபாய் பேராசிரியர் கே.சிவன் கலந்துக் கொண்டு பேசுகையில், மாணவிகளான நீங்கள் இந்த பட்டங்கள் பெற பெற்றோர்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணம். இப்பட்டத்துடன் திருப்பதி அடைந்து உங்களின் தேடலை நிறுத்த கூடாது. மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் நாட்டு மக்களின் தேவைகளும் அதிகம்.

    எனவே நாடு மற்றும் மக்களின் தேவைகளை தீர்வு காணும் ஆராய்ச்சிதுறைகளில் நுழைந்து பணியாற்ற வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்புகள் காத்து கிடக்கின்றன. சிறிய வயதில் நான் ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன்.

    ஆனால் கிடைத்த படிப்பு மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி பின்னர் இஸ்ரோ அமைப்பில் சேர்ந்து ஆராய்ச்சியளராக பணியாற்றினேன். பின்னர் படிப்படியாக உயர்ந்து இஸ்ரோ அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினேன்.

    கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினால் நீங்களும் பெரிய வெற்றியாளராக மாறலாம் என்று அவர் பேசினார்.

    தொடர்ந்து இளங்கலை முடித்த 766 மாணவிகள், முதுகலை முடித்த 191 மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞர் முடித்த 16 மாணவிகள் என மொத்தம் 973 மாணவிகளுக்கு பட்டமளித்தார். தொடர்ந்து பல்கலைகழக தரவரிசையில் இடம் பெற்ற 5 மாணவிகளுக்கும், கல்லூரி அளவில் துறைவாரியாக முதல் 3 இடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் திருவள்ளுவர் பல்கலைகழக பதிவாளர் ஆர்.விஜயராகவன், பட்டயகணக்காளரும் கிச்சா மற்றும் பிரபுகேசவன் நிறுவன நிர்வாகி அனில்கிச்சா, புஷ்பாஞ்சலி மின்னணு இதழ் பதிப்பாசிரியர் கோவிந்முந்தரா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா, கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரியைகள், கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ×