என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் விரைவு"

    • குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
    • கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் அக்கிராம சிறுவர்கள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு குல்பி ஐஸ் சாப்பிட்ட பெரும்பாலான சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கில் அவதிப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிறுவ ர்களை அனுமதித்தனர். இத்தகவல் பரவியதால், குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அதன்படி 3 வயது குழந்தைகள் முதல் 15 வயது சிறியவர்கள் வரை மொத்தம் 87-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் பெரும்பா லான சிறுவர்களை மருத்து வமனையில் அனுமதித்த டாக்டர்கள், அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

    இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், குல்பி ஐஸ் விற்ற ஏழு செம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன் மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார். சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் மற்றும் அவரது பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் நலம் விசாரித்தனர். தொடர்ந்து சிகிச்சை குறித்து டாக்ட ர்ளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார். துறைத் தலைவர் புகழேந்தி. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய ரவிதுரை, ஜெயபாலன் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும், குல்பி ஐஸ் வியாபாரி எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தார் என விசாரித்து, அங்கு சென்று சோதனை நடத்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    ×