search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சாந்தி ஆய்வு"

    • வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளை ஏப்ரல் 15-க்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், ஏரியூர் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஏரியூர் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி பருத்திகாட்டு திண்ணையில் தரிசு நில தொகுப்பு 18.05 ஏக்கரில் 14 விவசாயிகளைக் கொண்ட குழு பதிவு செய்து தரிச நில தொகுப்பு குழுவிற்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும், ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பொருத்திய பணியும் மற்றும் நுண்ணீர் பாசன திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து அங்குள்ள விவசாயிகளிடம் திட்டப் பணிகளை குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

    அத்திமரத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிட மற்றம் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும், ஏரியூர் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சியில் 18.05 ஏக்கரில் மா மற்றும் எலுமிச்சை நடவு செய்யும் பணியும், நுண்ணீர் பாசனம் அமைக்கும் பணி முதல் ஆழ்துளை கிணற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளதால் இரண்டாவது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆழ்துளை கிணற்றிக்கு மின் இணைப்பு மற்றும் இதர மா, எலுமிச்சை நடவு பணிகளை ஏப்ரல் 15-க்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்தஆய்வின் போது வேளாண்மை இணை இயக்கநர் விஜயா, செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை மாது, உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அறிவழகன் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் உடனிருந்தனர்.

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சியில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பென்னாகரம் பேருந்து நிலையம் மேம்படுத்துதல் பணியினையும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பென்னாகரம் சிறுவர் பூங்கா மேம்படுத்துதல் பணியினையும் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பாப்பாரப்பட்டி வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணியினையும், ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பாப்பாரப்பட்டி சின்ன ஏரி புனரமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, பிக்கம்பட்டியில் ரூ.3.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தானியகளம் அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அஞ்சேஹள்ளி நல்லபுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கணிம நிதியில் ரூ.19.10 லட்சம் மதிப்பீட்டியில் கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினையும் என மொத்தம் பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    இந்த ஆய்வின்போது பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்படி, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள முகமது அலி கிளப் சாலையில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அடித்தளம், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    இதையடுத்து வார்டு எண்-4-க்குட்பட்ட சந்தைபேட்டை பகுதியில் "கலைஞரின் நமக்கு நாமே திட்டம்"-த்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், வார்டு எண்-33-க்குட்பட்ட அன்னசாகரம் பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரோக்கிய மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள ெரயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு, இச்சாலையினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    தருமபுரி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அடித்தளம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் 112 வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தருமபுரி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள்ளும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    • ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வள மையம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
    • மாவட்ட வளமைய கூட்டரங்கம் 2605 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிப்பதற்காக கட்டப்பட்டு வரும் மாவட்ட வள மைய கூட்டரங்கினை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிப்பதற்காக தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வள மையம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாவட்ட வளமைய கூட்டரங்கம் 2605 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர் வா.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • சாலை பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புலிக்கல் பஞ்சாயத்தில் ரூ 48.34 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட தார் சாலை பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாலையின் தரம் மற்றும் உயரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பொம்ம அள்ளி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பிடிஓக்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×