search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்  -கலெக்டர் சாந்தி ஆய்வு
    X

    பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் -கலெக்டர் சாந்தி ஆய்வு

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பென்னாகரம் பேரூராட்சியில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பென்னாகரம் பேருந்து நிலையம் மேம்படுத்துதல் பணியினையும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பென்னாகரம் சிறுவர் பூங்கா மேம்படுத்துதல் பணியினையும் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பாப்பாரப்பட்டி வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணியினையும், ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பாப்பாரப்பட்டி சின்ன ஏரி புனரமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, பிக்கம்பட்டியில் ரூ.3.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தானியகளம் அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அஞ்சேஹள்ளி நல்லபுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கணிம நிதியில் ரூ.19.10 லட்சம் மதிப்பீட்டியில் கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினையும் என மொத்தம் பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    இந்த ஆய்வின்போது பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×