search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்  ரூ.24 கோடி மதிப்பீட்டில்   112 வளர்ச்சி திட்டப்பணிகள்  -கலெக்டர் சாந்தி ஆய்வு
    X

    தருமபுரி ரெயில் நிலையம் செல்லும் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு, கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், பொறியாளர் ஜெயசீலன் உள்பட பலர் உள்ளனர்.

    தருமபுரியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் 112 வளர்ச்சி திட்டப்பணிகள் -கலெக்டர் சாந்தி ஆய்வு

    • வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்படி, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள முகமது அலி கிளப் சாலையில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அடித்தளம், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    இதையடுத்து வார்டு எண்-4-க்குட்பட்ட சந்தைபேட்டை பகுதியில் "கலைஞரின் நமக்கு நாமே திட்டம்"-த்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், வார்டு எண்-33-க்குட்பட்ட அன்னசாகரம் பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரோக்கிய மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள ெரயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு, இச்சாலையினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    தருமபுரி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அடித்தளம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் 112 வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தருமபுரி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள்ளும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×