search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண் மரணம்"

    • பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார்.
    • தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் நெசவாளர் காலனி சேர்ந்தவர் கார்த்தி (26). இவரது மனைவி பிருந்தா (23).

    இருவரும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராயபாளையத்தில் கார்த்தி, பிருந்தா தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 27-ந்தேதி கார்த்தி திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று இரவு பிருந்தா ஒரு தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உணவு வரவழைத்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார்.

    இந்நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் பிருந்தா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பிருந்தாவின் தாய்க்கும் அவரது கணவர் கார்த்திக்கும் தகவல் கொடுத்தார்கள். அவர்கள் பிருந்தா வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிருந்தா பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மனைவி உடலை பார்த்து கார்த்திக் கதறி அழுதார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இதற்கிடையே பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதை பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிருந்தா எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆரோக்கிய மேரியை கொண்டு சென்றனர்.
    • ஆரோக்கிய மேரியை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி(38). இவரது கணவர் அற்புதராஜ்.

    இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆரோக்கிய மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆரோக்கிய மேரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, அவரது மகன் ஆரோக்கியமேரியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஆரோக்கிய மேரிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஆரோக்கியமேரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    மேலும் சோதனை செய்த போது மேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு சூரம்பட்டி துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர். மேரி இறப்புக்கான காரணம் சரியாக தெரியவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் வேறு எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மேரியுடன் பழகிய நபர் குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • உஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா (வயது 38).

    இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்பொழுது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் உஷா மொபட்டில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.

    கட்டைக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டை கடந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் உஷாவின் மொபட் மீது வேகமாக மோதியது. இதில் உஷா தூக்கி வீசப்பட்டார்.

    8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷாவிற்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்களும் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பிறகு உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதல் நிலை காவலர் உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    பலியான முதல் நிலைக் காவலர் உஷா நெல்லை மாவட்டம் மற்றும் நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×