search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி அறக்கட்டளை"

    மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கருணாநிதி அறக்கட்டளைக்காக அவர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    2018 நவம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin
    கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ கல்வி உதவித்தொகையாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். #MKStalin
    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக மறைந்த கருணாநிதி ஏற்கனவே தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கிய ரூ.4 கோடி வங்கியில் போடப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வட்டி பணம் மருத்துவம், கல்வி உதவி தொகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆகஸ்டு மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் இருந்து மருத்துவ-கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு காசோலையாக தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். #MKStalin

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டணை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று நிதியாக வழங்கப்பட்டது.
    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2018 ஜூன் மாதத்துக்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று வழங்கப்பட்டது.

    நிதிபெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.
    ×