search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன் பிறந்தநாள்"

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சங்ககிரி:

    கோவை தெற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக கோவை புளியகுளத்தைச் சேர்ந்த வட்டச் செயலாளர் வாசுதேவன்(47) உள்பட 20 பேர் நேற்று இரவு கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி சொகுசு பஸ்சில் சென்றனர்.

    பஸ்சை கோவை துடியலூரைச் சேர்ந்த டிரைவர் சங்கர் (40) ஓட்டிச் சென்றார். இரவு 1:45 மணிக்கு சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குப்பனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டாரஸ் லாரியின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பகுதி முழுவதும் சிதைந்து சேதம் அடைந்தது. விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவை புளியகுளத்தை சேர்ந்த மல்லேஸ்வரி (23), வெங்கடேஷ் (26), மாரிமுத்து (44), பவன்சாய் (44), தீனதயாளன் (45), ஜோசி (48), பிரகாஷ் (43), சுரேந்திரபாபு (35), ஐயப்பன் (48), வெங்கட்ராஜ் (49), ஜான்சன் (52), வாசுதேவன் (46), சசிகுமார் (46), சீனிவாசன் (48), ராஜ்குமார் (47) ஆகிய 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் அவசரக்கால மருத்துவநுட்பர் ராமச்சந்திரன், பைலட் சரவணகுமார் ஆகியோர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இடுபாட்டில் சிக்கி இருந்த பஸ் டிரைவர் சங்கரை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×