search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் சந்தேகம்"

    பெருந்துறை அருகே நடத்தையில் கணவர் சந்தேகமடைந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த ஈரோடு ரோடு பழனிக்காட்டுப் புதூர் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த சிமான் சல்போதா என்பவர் தனது மனைவி சந்தோஷினி(21) மற்றும் அஸ்சின் போதா(3) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் தனது மனைவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இது குறித்து சந்தேகமடைந்த அவர் தனது மனைவியை திட்டினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷினி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது சேலையில் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீடு திரும்பிய கணவர் தூக்கில் தொங்கிய தனது மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அவர்கள் உதவியுடன் தனது மனைவியை கீழே இறக்கி பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது.

    இது தொடர்பாக பெருந்துறை போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த சந்தோஷினிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    முத்துப்பேட்டையில் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கற்பகநாதர் குளம் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி. இவரது மனைவி கலைராணி (வயது 37).

    உத்தராபதி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் மகள் சடங்கு நிகழ்ச்சிக்கு உத்தராபதியும், கலைராணியும் சென்றனர். அப்போது அவர்களுகிடையே மீண்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கலைராணி தங்களது வீட்டுக்கு சென்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை திருவாரூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கலைராணியின் உறவினர் அண்ணாதுரை முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×