search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ் வளைவு"

    • திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • விபத்துக்குள்ளான லாரியை போலீசாரும், பொதுமக்களும் அப்புறப்படுத்தினர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்கும், கேரளா விற்கும் சென்று வருகின்றன.

    இந்த பகுதியில் அமைந்துள்ள புளியரை எஸ் வளைவில் நீளமான தொட்டிகள் கொண்ட கனரக லாரிகள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சற்று தொலை விலேயே நிறுத்தப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    அணிவகுத்த வாகனங்கள்

    இந்நிலையில் நேற்று மதியம் கேரளாவில் இருந்து தென்காசி நோக்கி வந்த கனரக லாரி ஒன்று எஸ் வளைவு பகுதியில் எதிர்பா ராதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாக னங்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டன.

    இதன் காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வாகனங்க ளும், கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்க ளும் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியா மல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

    போக்குவரத்து நெருக்கடி

    இந்நிலையில் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரியை கிரேன் உதவியுடன் போலீசாரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். கடும் நெருக்கடிக்கு இடை யில் துரிதமாக செயல்பட்டு லாரியை அப்புறப்படுத்திய பின்னர் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சா லையில் போக்குவரத்து சீரானது. ஏற்கனவே செங்கோட்டை முத்துச்சாமி பூங்கா மற்றும் வனத்துறை சோதனை சாவடி பகுதி களில் பாலப்பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதன் காரணமாகவும் அந்த சாலையில் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு மாலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருப்பதால், கூடுதலாக போலீசார் நிறுத் தப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

    எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×