search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுதினார்கள்"

    பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.14-

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொது தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10508 மாணவர்களும், 11572 மாணவிகளும் என மொத்தம் 22080 பேர் எழுதுகிறார்கள். இதை யடுத்து தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டது. 84 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதையடுத்து காலையிலேயே மாணவ- மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்கான இறுதிக்கட்ட படிப்பை மேற்கொண்டனர்.

    பின்னர் தேர்வு மையத்திற் குள் மாணவ-மாணவிகள் சென்றனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறி தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகள் குறித்த விபரம் பள்ளி வளாகத்திற்குள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங் கியது. இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதத் தொடங்கினார்கள். மதியம் தேர்வு முடிவடைந்தது. தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டிருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    தேர்வுகள் முடிவடைந்து தொடர்ந்து பலத்த பாது காப்புடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளிக்கும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் படந்தாலுமூடு சேகரட் கார்ட் மெர்டிக் மேல்நிலைப்பள்ளிக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. விடைத்தாள்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×