search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் சஸ்பெண்டு"

    • மண்டபம் பேரூராட்சியில் மதுபோதையில் குடிதண்ணீரை வீணடித்த ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 11 ஒன்றியங் களைச் சேர்ந்த 429 ஊராட்சி களில் உள்ள 2 ஆயிரத்து 332 கிராம மக்களின் அன்றாட பயன் பாட்டிற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தையடுத்து 2021-ம் ஆண்டு வரை காவிரி குடிநீர் விநியோகம் பெரும்பாலான இடங்களில் தொய் வடைந்தது. மண்டபம் பேரூ ராட்சியில் உள்ள 18 வார்டு மக்களுக்கு 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. ஆனால், இந்த அளவு தண்ணீர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையான விநியோக மில்லை என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

    கடந்த மாதம் நடந்த பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    கிணறுகளில் இருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு நீர் ஏற்றுவதற்கு ஆன் செய்யும் மின் மோட்டார் சுவிட்சை உரிய நேரத்தில் நிறுத்த தவறியதால் 5-க்கும் மேற்பட்ட மின் மோட் டார்கள் பழுதடைந்தன. இதனால் தண்ணீர் விநியோகம் தடை பட்டு உள்ளதாக பொது மக்களின் குற்றச்சாட்டு குறித்தும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த, 18 வார்டுகளுக்கு தலா 6 வார்டுகள் வீதம் சுழற்சி முறையில் பொது குழாய், வீட்டு இணைப்புகளுக்கு தண்ணீர் திறந்துவிட பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இப்பணியை முறைப்படுத்த தண்ணீர் திறந்து விடப்படும் நாட்களில், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கையொப்பம் பெறவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டபம் தென் கடற்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கடந்த 29-ந் தேதி இரவு மைக்குண்டு பகுதி தொட்டியில் 2மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக வெளி யேறியது. இதை நிறுத்த சம்பந்தப்பட்ட ஊழியரை அப்பகுதி இளைஞர்கள் தேடிய வந்தபோது பணியில் இருந்த ஊழியர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மலைராஜ் (45) என்பவரை சஸ்பெண்ட் செய்து செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • புலிக்குத்தி தெரு வில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான ரேசன் கடை உள்ளது.
    • கண்ணன் என்பவருக்கு ரேசன் கார்டு இல்லாமல் 50 கிலோ அரிசியை முறைகேடாக விற்றதாக புகார் எழுந்தது.

    ேசலம்:

    சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் புலிக்குத்தி தெரு வில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான ரேசன் கடை உள்ளது.

    இங்கு கஸ்தூரி என்ற பெண், விற்பனையாளராக உள்ளார். இவர் கடந்த 4-ந்தேதி சேலம் குகையை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரேசன் கார்டு இல்லாமல் 50 கிலோ அரிசியை முறைகேடாக விற்றதாக புகார் எழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் , கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கஸ்தூரியை சஸ்பெண்டு செய்து மண்டல இணைப்ப திவாளர் ரவிக்குமார் நேற்று உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், எந்த வித முன்னறிவிப்பு இன்றி தலைமையிடத்தை விட்டு விற்பனையாளர் வெளியே செல்லக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கு பதில் புலிக்குத்தி தெருவில் உள்ள ரேசன் கடைக்கு மற்றொரு ரேசன் கடை விற்பனையாளர் மோக னம்மாள் என்பவர் நிய மிக்கப்பட்டு கூடுதல் பொ றுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×