search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்க்காவல்படை"

    • திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.
    • நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு, நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்த பட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப்பின்னணியும், எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சி சார்ந்தவராகவோ இருக்கக்கூடாது.

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இன்று அக்., 21 முதல், வரும், 30 வரை, நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஊர்க்காவல்படை அலுவலகத்தில், வரும் 30-ந் தேதி, மாலை, 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஆட்கள் தேர்வு நடக்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பள்ளி, கல்லுாரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (இருப்பின்) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பி இணைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ×