search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிருக்கு போராட்டம்"

    இந்தியாவில் பதன்கோட் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத்அசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #JeM #MasoodAzhar
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ- முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (50). இந்தியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடக்க காரணமாக இருந்தவன். 2001-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதல், 2005-ம் ஆண்டு நடைபெற்ற அயோத்தியா தாக்குதல் மற்றும் 2016-ம் ஆண்டு பதன்கோட் விமான படை தளம் தாக்குதல்களில் தொடர்புடையவன்.

    தற்போது இவன் முதுகு தண்டுவடம் மற்றும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவன் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தங்கி கடந்த 1½ ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறான்.

    எனவே இவனது சகோதரர்கள் ரயூப் அஸ்கர், ஆதார் இப்ராகீம் ஆகியோர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை பிளவுபடுத்தி நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் இந்த இயக்கம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    மசூத் அசார் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக கிடப்பதை இந்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளால் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவனை பாகிஸ்தானில் உள்ள பகவல் பூரிலோ வேறு எங்குமோ காண முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

    மசூத்அசார் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, பயங்கரவாதிகள் விமானத்தை காந்தகாருக்கு கடத்தி அதில் இருந்த 814 பயணிகளை பணய கைதிகளாக வைத்தனர். பின்னர் மசூர் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை மீட்டு சென்றனர். இவனை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது. அதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. #JeM #MasoodAzhar
    ×