search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்"

    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஈடன் ஹசார்டு ஹாட்ரிக் கோல் அடிக்க செல்சி 4-1 என கார்டிப் சிட்டியை வீழ்த்தியது. #EPL #Chelsea
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் செல்சி - கார்டிஃப் சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் கார்டிஃப் சிட்டி அணியின் சோல் பம்பா கோல் அடித்து செல்சி அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 37-வது நிமிடத்தில் செல்சி அணியின் ஈடன் ஹசார்டு கோல் அடித்தார். அத்துடன் 44-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செல்சி 2-1 என முன்னிலைப் பெற்றது.


    வில்லியன்

    2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் 80-வது நிமிடம் வரை கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஹசார்டு கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வில்லியன் ஒரு கோல் அடிக்க செல்சி 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் இன்றைய வார ஆட்டங்களில் செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன. #EPL2018 #Chelsea #MachesterCity
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் நேற்று பல ஆட்டங்கள் நடைபெற்றன. ஒன்றில் செல்சி - பவுர்ன்மவுத் அணிகள் மோதின. இதில் செல்சி அணி 2-0 என வெற்றி பெற்றது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேரத்தில் செல்சி அணி அசத்தியது. அந்த அணியின் பெட்ரோ 72-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஈடன் ஹசார்டு 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செல்சி 2-0 என வெற்றி பெற்றது.


    மான்செஸ்டர் சிட்டி வீரர்  ஸ்டெர்லிங் பந்தை கடத்தும் காட்சி

    மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - நியூகேஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் அணியின் எட்லின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற்றது.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் முன்னணி கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது. #EPL #MUN
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்தில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் சீசன் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்ததால் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. பின்னர் முதல் நான்கு இடத்திற்குள் வருமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் தொடரின் பிந்தைய ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது. 2017-18 சீசனில் ஒவ்வொரு அணியும் 38 போட்டிகளில் விளையாட வேண்டும். மான்செஸ்டர் யுனைடெட் தனது 37-வது ஆட்டத்தில் நேற்றிரவு வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது.



    இதன்மூலம் மான்செஸ்டர் 37 போட்டிகள் முடிவில் 24 வெற்றி, 7 தோல்வி, 6 டிரா உடன் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 22 வெற்றி, 7 தோல்வி, 8 டிராவுடன் 74 புள்ளிகள் பெற்றுள்ளது. லிவர்பூல் 20 வெற்றி, 5 தோல்வி, 12 டிரா உடன் 72 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்து, டோட்டன்ஹானம் ஹாட்ஸ்பர், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றாலும் 78 புள்ளிகளை பெற இயலாது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது.
    ×