search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ பரந்தாமன்"

    • பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காக 1000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்தி முதலமைச்சர் தந்தை உணர்வோடு கடமை உணர்வோடு பரிவோடு செயல்படுகிறார்.
    • பெண் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பராமரிக்கும் அரசாக இந்த திராவிடம் மாடல் அரசு இருந்து வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் 2023 - 24 - ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்தின் போது சென்னை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. இ.பரந்தாமன் பேசியதாவது:-

    பொருளாதாரத்தை நான் 3. அடுக்குகளாக பிரித்துப் பார்க்கிறேன். உலக பொருளாதாரம், இந்திய பொருளாதாரம் தமிழ்நாட்டின் பொருளாதாரம். உலகில் எத்தனையோ நிதிநிலை வங்கிகள் இருக்கின்றன. சிலிக்கான் வேலி பேங்க், கிரெடிட் ஷூஸ் பேங்க், சில்வர் கேட் கேப்பிட்டல் பேங்க் ஆகிய பெரும் நிதி நிறுவனங்கள் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியை வழங்கிக் கொண்டு வந்தன. ஆனால் தற்போது அவை திவால் ஆகி கொண்டிருக்கின்றன.

    மேலும் உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரத்தின் வீழ்ச்சி எவ்வாறு இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். அடுத்ததாக ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்று சொல்லக்கூடிய அதானி குழுமத்தினுடைய நடவடிக்கைகளினால் தேசிய பங்குச்சந்தையில் ஏறத்தாழ ரூ 12 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலங்களில் இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கம்பெனிகள் எல்லாம் நலிந்து நொடிந்து போய் இருக்கின்றன.

    இந்திய அரசாங்கத்திடமிருந்து வரக்கூடிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வராமல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடி சூழ்நிலையில் செலவுகளை குறைத்து சமூகநலன் சார்ந்த திட்டங்களை அதிகமாக கொடுத்து ஒரு நிதிநிலை அறிக்கையை இந்த அரசு இங்கு தாக்கல் செய்திருக்கிறது என்பதை பார்த்தால் நிச்சயமாக இதுதான் திராவிட மாடல் அரசாங்கத்திற்கான நிதிநிலை அறிக்கை. இது இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது.

    தமிழ்நாட்டைப் பேணி காப்பதில் தமிழர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் தாயாக விளங்குகிறார். ஆண் தாயாக முடியுமா என்று கேள்விக்கு முடியும் என்று தனது செயல்பாடுகளின் மூலம் பதிலளித்திருக்கிறார். மகளிருக்கு மாதம் ரூ.1000 என்பது முதலமைச்சரின் அசாத்திய சாதனை. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தராமல் இருக்கிறார்கள்? நீட் மசோதாவை இயற்றி அனுப்பி ஒன்றிய அரசிடம் ஒன்றிய அரசிடம் தேங்கி கிடக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தி ற்காக ஒரு சட்டத்தை இயற்றி அனுப்பிய பிறகு மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பியது. இவற்றில் எல்லாம் இவர்களுக்கு சமூகப் பார்வை இல்லையா. பிங்க் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட பஸ் ஒன்று வருகிறது அதற்கு மக்கள் வைத்துள்ள பெயர் ஸ்டாலின் பஸ். மக்கள் மற்றும் பெண்கள் மனதில் எழுதி வைக்கப்ப ட்டுள்ள அந்த பெயரை யாராலும் அழிக்க முடியாது.

    பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காக 1000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்தி முதலமைச்சர் தந்தை உணர்வோடு கடமை உணர்வோடு பரிவோடு செயல்படுகிறார். மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் என்பது உதவி மட்டுமல்ல தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் கலைஞரும் வலியுறுத்திய சுய மரியாதையை நிலை நாட்டுகின்ற மகத்தான திட்டம். பெண் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பராமரிக்கும் அரசாக இந்த திராவிடம் மாடல் அரசு இருந்து வருகிறது. திட்டங்கள் எல்லாம் சரியாக செயல்படுத்தப்படு கின்றன என்பதை கவனிக்க மாவட்டங்கள் தோறும் செல்கின்ற ஒரே முதலமைச்சர் இந்திய திருநாட்டிலேயே நம் முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×