search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்ட்ராய்டு பை"

    கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தின் கோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Android9Pie #Google


    கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. புதிய வகை இயங்குதளம் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களிலும் புதிய இயங்குதளம் சீராக இயங்கும் படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தின் கோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஆன்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்) இயங்குதளத்தில் கூடுதலாக 500 எம்பி ஸ்டோரேஜ், வேகமான பூட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆன்ட்ராய்டு பை (கோ எடிஷன்) தளத்தில் வெரிஃபைடு பூட் போன்ற பாதுகாப்பு அம்சம், டேட்டா பயன்பாட்டை டிராக் செய்யும் டேஷ்போர்டு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஓ.எஸ். உடன் கோ எடிஷன் செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. 



    இந்த செயலிகள் கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன. அதன்படி யூடியூப் கோ செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் கூகுள் கோ செயலியில் இணையப்பக்கங்களை மிக எளிமையாக படிக்க ஏதுவாக ஒவ்வொரு வார்த்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. மேப்ஸ் கோ செயிலியில் நேவிகேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளதால், பயனர்கள் மிக எளிமையாக தங்களக்கு தெரியாத பகுதிகளுக்கு சென்றுவர முடியும்.

    இதேபோன்று அசிஸ்டண்ட் கோ செயலியில் கூடுதலாக ஸ்பானிஷ், பிரேசிலியன் போர்ச்சுகீசு மற்றும் இந்தோனேசிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் ப்ளூடூத், கேமரா, ஃபிளாஷ்லைட் மற்றும் ரிமைன்டர்களுக்கான வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. ஆன்ட்ராய்டு கோ எடிஷனுக்கான ஆன்ட்ராய்டு மெசேஜஸ் செயலி 50% சிறியதாகவும், போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.

    ஆன்ட்ராய்டு பை (கோ எடிஷன்) இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட இருக்கிறது. #Android9Pie #Google
    கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஆன்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #AndroidPie


    கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9.0 பி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் பை என அழைக்கப்படுவதாகவும் இதற்கான முதல் ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் இருந்கு டவுன்லோடு செய்யலாம்.

    இத்துடன் புதிய இயங்குதள அப்டேட் OTA மூலமாகவும் வழங்கப்படுகிறது, பீட்டா திட்டத்திற்கு சைன்-அப் செய்தவர்கள் இதை கொண்டு அப்டேட் செய்து கொள்ளலாம். இத்துடன் ஆன்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ரோஜக்ட் முறையிலும் அப்டேட் வழங்கப்படுகிறது. பிக்சல் போன்றே எசென்ஷியல் போனுக்கும் புதிய இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது.



    ஆன்ட்ராய்டு 9.0 அப்டேட் உடன் ஆகஸ்டு, 2018 ஆன்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் உடன் வழங்கப்படுகிறது. பிக்சல் சி, நெக்சஸ் 5X மற்றும் 6P மாடல்களுக்கும் ஆன்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, எனினும் இது ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்தே இருக்கும்.

    ஆன்ட்ராய்டு பி செக்யூரிட்டி பேட்ச் மூலம் அடாப்டிவ் பேட்டரி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி செயலிகளுக்கு முன்னுரிமை வழங்கும். ஆன்ட்ராய்டு பி பீட்டாவில் சோனி எகஸ்பீரியா XZ2, சியோமி Mi மிக்ஸ் 2எஸ், நோக்கியா 7 பிளஸ், ஒப்போ ஆர்15 ப்ரோ, விவோ X21 / X21UD மற்றும் ஒன்பிளஸ் 6 சாதனங்கள் பதிவு செய்திருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

    அதன்படி புதிய இயங்குதளத்துக்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்ட்ராய்டு 9 அப்டேட் பல்வேறு இதர சாதனங்களுக்கு வழங்க பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #AndroidPie #Google
    ×