search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் சேவை"

    • புதிய ஆதார் அட்டை பதிவுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
    • போட்டோ ஒட்டப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது, சொத்து வரி ரசீது, வீட்டு வரி ரசீது, கியாஸ் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக கொண்டு வர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை பெற சிறப்பு சேவை முகாம் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் அட்டை புதிதாக எடுக்க விரும்புபவர்கள் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு சேவை வழங்கப்படுகிறது.

    புதிய ஆதார் அட்டை பதிவுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் பாலின திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

    பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிம அட்டை, போட்டோ ஒட்டப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது, சொத்து வரி ரசீது, வீட்டு வரி ரசீது, கியாஸ் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக கொண்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு குழந்தையின் 5 மற்றும் 15 வயதிலும் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கு 7 வயது மற்றும் 17 வயது வரை மட்டுமே கட்டணம் ஏதும் இன்றி புதுப்பிக்க முடியும். 7 மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஆதார் அட்டை பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்கள் அடையாள சான்று, முகவரி உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பதை அவசியமாக்கும் வகையில் ஆதார் ஒழுங்கு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ளது. இந்த வசதியையும் தபால் அலுவலகத்தில் பெற்று பயனடையலாம்.

    இது தவிர பாரூர், பொம்மிடி, தருமபுரி கலெக்டர் அலுவலகம், கடத்தூர், கம்பைநல்லூர், குமாரசாமிபேட்டை, மாரண்டஅள்ளி, மொரப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பார ப்பட்டி, பென்னாகரம், பெரியானஅள்ளி, தீர்த்தமலை ஆகிய துணை தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.

    இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமில், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • ஆதார் சேவை முகாமில், 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை கருவந்தா ஆர்.சி. கோவில் வளாகத்தில் 3 நாட்கள் நடந்த ஆதார் சேவை முகாமில், குழந்தைகளுக்கான புதிய ஆதார் அட்டை எடுத்தல், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை மேற்கொள்ளுதல், பெயர், முகவரி, செல் நம்பர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

    முகாமில் போஸ்ட் மாஸ்டர்கள் தனுசியா, ஞான துரை, ஆய்வாளர் வேதமாணிக்கம், ஓவர்சியர் கள் முத்துராஜ், கணேசன், அலுவலகப் பணியாளர்கள் கலையரசன், கார்த்தி, சேகர், பிச்சை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு ஆதார் சேவைகளை வழங்கினர்.

    முகாம் ஏற்பாடுகளை கருவந்தா பஞ்சாயத்து தலைவர் தானியேல், துணைத்தலைவர் மங்களம் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    ×