search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ கவிழ்ந்து விபத்து"

    • நாமக்கல்லில் இருந்து தாராபுரத்திற்கு சரக்கு ஆட்டோவில் குளிர்பா னங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது திடீரென பின்பக்க டயர் வெடித்ததில் சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பரமத்திவேலூர்:

    திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்த வர் அய்யப்பன். இவரது மகன் மதுபாலன் (வயது 23). இவர் நேற்று நாமக்கல்லில் இருந்து தாராபுரத்திற்கு சரக்கு ஆட்டோவில் குளிர்பா னங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர் படமுடி பாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே சரக்கு ஆட்டோ அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பின்பக்க டயர் வெடித்ததில் சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த குளிர்பான பாட்டில்களின் கட்டுகள் சாலையில் சிதறி விழுந்தது. மேலும் டிரைவர் மதுபாலன் படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், விபத்தில் சிக்கிய மதுபாலனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மதுபாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே ஆட்டோ கவிழ்ந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கவிழ்ந்து கிடந்த ஆட்டோவையும், சாலையில் சிதறி கிடந்த குளிர்பான பாட்டில் கட்டுகளையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×