என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழுகிய நிலையில் ஆண் பிணம்"

    சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆற்றில் பிணமாக மிதந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு ஊர் திரும்பும்போது குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்காலம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கரூர் மாவட்ட நொய்யல் அருகே காவிரி ஆற்றின் நடு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட நொய்யல் அருகே காவிரி ஆற்றின் நடு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து கோம்புப்பா ளையம் கிராம நிர்வாக அலு வலர் சரண்யா வேலாயுதம் பாளையம் போலீசுக்கு தக வல் தெரிவித்தார். 
    மேலும் தீய ணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காவிரி ஆற்றில் கிடந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கலாம் எனவும், அவர் சுமார் 5 1/2 உயரத்தில் கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் சாம்பல் நிற அரைக்கால் டவுசர் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    ×