search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க மந்திரி"

    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சிறப்பு தூதரும், மூத்த தலைவருமான கிம் யாங் சோலுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NorthKorea #MikePompeo #KimYongChol
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர்.

    இந்த சந்திப்பின்போது இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இரு தரப்பிலும் உழைப்பது என உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பகைவர்களாக இருந்து வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் இடையே இணக்கமான நல்லுறவு மலர்ந்தது. ஆனால் அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா குறிப்பிடத்தக்க அளவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ளாத நிலையில், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்கிற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்தது.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நியூயார்க் நகரில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு தூதரும், மூத்த தலைவருமான கிம் யாங் சோலுடன் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது.

    இதுபற்றி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சந்திப்பு மற்றொரு நாளில் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடக்கவிருந்த சந்திப்பு ரத்தானதின் காரணம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. 
    சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். #SaudiKingSalman #MikePompeo
    ரியாத்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்ற அவர், மாயம் ஆனார்.



    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபிய மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், “ சவுதி மன்னரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், எங்கள் சவுதி அரேபிய குடிமகனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அவர் இந்தப் பிரச்சினையில் விடை காண்பதற்கு துருக்கியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மன்னரை சந்தித்துப் பேசுதற்காக வெளியுறவு மந்திரியை அங்கு (சவுதி அரேபியா) உடனே அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி அவர் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சவுதி அரேபியா அனுப்பினார்.

    நேற்று ரியாத் போய்ச் சேர்ந்த மைக் பாம்பியோ, சவுதி மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் மைக் பாம்பியோ சந்தித்து விட்டு துருக்கி நாட்டுக்கு விரைகிறார்.

    இதற்கு மத்தியில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி சவுதி அரேபியாவும், துருக்கியும் தெரிவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பசேலெட் வலியுறுத்தி உள்ளார். #SaudiKingSalman #MikePompeo 
    பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். #Pakistan #US #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் டெலி போனில் பேசினார்.

    அப்போது இவருக்கு வாழ்த்து கூறிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார்.

    பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் நியூரெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதை இம்ரான்கான் அரசு மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறும் போது, “அமெரிக்க மந்திரி பாம்பியோ பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

     முகமது பைசல்

    அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் பயங்கரவாதிகள் மீது திடமான நடவடிக்கை குறித்து பேசப்படவில்லை. எனவே இது குறித்து சரியான திருத்தத்துடன் அமெரிக்கா அறிக்கை வெளியிட வேண்டும்” என வலிறுத்தியுள்ளார். அது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி இஸ்லாமாபாத் வருகை தர உள்ளார். புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இந்த நிலையில் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #Pakistan #US #ImranKhan
    ×