என் மலர்
நீங்கள் தேடியது "அதிரடிப்படை முகாம்"
- திம்பம் மலைப்பகுதியில் சிறப்பு இலக்கு படை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யனூர் வனப்பகுதியில் ஏற்கனவே அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் 2-வதாக சிறப்பு இலக்கு படை (அதிரடிப்படை) முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி ப்படை முகாமை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து இன்று காலை திம்பம் அதிரடி ப்படை முகாம் அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு இலக்கு படை காவல்துறை தலைவர் முருகன், இலக்கு படை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இலக்கு படை சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இலக்கு படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
திம்பம் சிறப்பு இலக்கு படையில் இலக்கு படை இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






