search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth run"

    • ராஜேஸ்வரியின் 2-வது மகளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது.
    • பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம். இவரது வீட்டில் ராஜேஸ்வரி என்பவர் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கமலம் வீட்டின் மொட்டை மாடியில் உலர வைக்கப்பட்டிருந்த மணிலாவை, ராஜேஸ்வரியின் 2-வது மக–ளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த கமலம் அவரது மகன், மகள் ஆகியோர் மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மீனா பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக கமலம் உள்ளிட்ட 3 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்–தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கமலம் உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்நிலையில் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கமலம், ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் சமரசம் பேசி குறிப்பிட்ட அளவு பணம் தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே ராஜேஸ்வரியின் குடும்பத்தால் தனக்கு ஆபத்து உள்ளது என்று கமலம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கமலம் வீட்டின் அருகில் தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

    அப்போது அங்கு வந்த ராஜேஸ்வரியின் உறவினர்களான பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பணத்கதை கொடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்–களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்–றனர். உடனே பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீ–சா–ரிடம் காட்டி, எங்–களை பிடிக்க முயற்சி செய்–தால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், தப்பிச் சென்ற 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×