search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemasadi"

    • போலி தங்க நகையை விற்க முயன்ற போது, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசுராமன்(வயது30) என்ற வாலிபரை, கையும், களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • கிஷோர் குமார்(32) போலி நகைகள் தயாரிக்க ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் கடந்த 10-ந் தேதி நகைக்கடையில் போலி தங்க நகையை விற்க முயன்ற போது, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசுராமன்(வயது30) என்ற வாலிபரை, கையும், களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பரசுராமனை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், போலி நகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வங்கிகளில் அடமானம் வைத்தல் உள்ளிட்ட குற்ற பட்டியலின் கீழ், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) புதுச்சேரி காவல் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்- இன்ஸ்பெக்டர் ஜெரோம்(38), ஜெரோமின் கள்ளக்காதலி புவனேஸ்வரி(35) காரைக்காலைச்சேர்ந்த ரமேஷ்(32), புதுத்துறை முகமது மைதீன், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ்(38), அவருக்கு உடந்தையாக இருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த சிவக்குமார்(45), கடலூரைச் சேர்ந்த சோழன்(52) என, இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று , காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார்(32) போலி நகைகள் தயாரிக்க ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

    ×