என் மலர்
நீங்கள் தேடியது "X-ray Center"
- ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நுண்கதிர்வீச்சு மையத்தை திறந்து வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நுண்கதிர்வீச்சு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ. அலுவலர் சந்திரமோகன், மருத்துவர் உமா செல்வி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழஈரால் ஊராட்சி தலைவர் பச்சை பாண்டி, கிளை செயலாளர் சண்முகவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவ ஊழியர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






