search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women conflict"

    • 8 பேர் மீது வழக்கு
    • தவணை தொகை செலுத்த வேண்டும் என கேட்கும் போது தகராறு ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொற்கொடி இவர் மகளிர் குழு தலைவியாக செயல்பட்டு வருகிறார்.

    இவரது குழுவில் சங்கீதா என்பவர் தனது உறவினர் நிவேதா என்பவருக்கு கடன் தொகை பெற்று கொடுத்து உள்ளார் இதனால் சங்கீதா கடன் தொகை தாமதமாக கட்டுவதாலும் இறுதி தவணை தொகை செலுத்த வேண்டும் என கேட்கும் போது தகராறு ஏற்பட்டது.

    மகளிர் குழு தலைவி பொற்கொடி மற்றும் 4 உறுப்பினர்கள் சங்கீதாவிடம் நிலுவைத் தொகை கேட்கும் போது தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி இரு தரப்பினரும் கையால் தாக்கிக் கொண்டனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் 3 ரூபாய்க்கு விற்ற புடவையை வாங்க வந்த பெண்களுக்குள் ஏற்பட்ட மோதல் மற்றும் நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். #warangal #sarees #shoppingmall
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு புடவை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

    இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலை முதல் அந்த கடையில் பெண்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே காலை 8 மணிக்கு துணிக்கடை திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் காத்து நின்ற பெண்கள் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.

    பெண்கள் ஒருவருக் கொருவர் அடிதடியிலும் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து அந்த துணிக்கடையை போலீசார் மூடினர். இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளம்பரங்களை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். கடை முன்பு திரண்டிருந்த பெண்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். #warangal #sarees #shoppingmall
    ×