search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman siege"

    கோவில்பட்டியில் குடிநீர் தொட்டி, மின் மோட்டார் அறை பழுதுதானதால் இதனை புதுப்பிக்கும் படி நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ராமலிங்கம் தெருவில் கடந்த 2007-ம் ஆண்டு அப்போதை எம்.பி. சிப்பிபாறை ரவிச்சந்திரன் நிதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 11 ஆண்டுகளான நிலையில், குடிநீர் தொட்டியும், மின் மோட்டார் அறையும் பழுது காணப்பட்டது. இதனை புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

    இதையடுத்து நகராட்சியில் இருந்து ஒப்பந்தம் விடப்பட்டு, குடிநீர் தொட்டியும் முழுவதுமாக இடிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என தனிநபர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ராமலிங்கம் தெருவை சேர்ந்த மக்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் நகராட்சிக்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர். 

    இதையடுத்து அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் அச்சையா, பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
    கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர்,எஸ்எஸ் நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்குமின் இணைப்பு, ரேசன் கார்டு, சொத்துவரி, மெட்ரோ வாட்டர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பொதுப் பணிதுறை சார்பில் பகுதி சர்வே எண் 813 இல் உள்ள 589 குடும்பங்கள் கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பில் வருவதாகவும், எனவே அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினார்.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதற்கிடையே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவிந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை குடும்பத்துடன் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    ×