search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewellery theft"

    பாப்பிரெட்டிப்பட்டியில், வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்த மர்ம கும்பல், தடுக்க வந்த கணவரை குக்கர் மூடியால் தாக்கிவிட்டு ஓடி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் சாலையில் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சரவணன் (வயது 63). இவருடைய மனைவி உமாதேவி. இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை செய்து வருவதால், கணவன், மனைவி இருவர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் சாப்பிட்டு முடித்து விட்டு, தட்டை கழுவுவதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் 4 பேர் திடீரென வீட்டுக்குள் புகுந்து உள்ளனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலி, 1¼ பவுன் தாலி மற்றும் 1½ பவுன் வளையலை “கட்டிங் பிளேயர் ” மூலம் வெட்டி எடுத்து, பறித்துள்ளனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் சத்தம் போட்டார். பின்னர் அவர் மர்ம ஆசாமிகளை தடுக்க வந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் அங்கிருந்த குக்கர் மேல் மூடியை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்து உள்ளனர். இதில் அவர் அலறி துடித்தார். இதையடுத்து மர்ம ஆசாமிகள் நகையுடன் அங்கிருந்து ஓடிவிட்டனர். மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த சரவணன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவி மட்டுமே தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டருகே பதுங்கி இருந்து வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கும்பல் யார் என விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
    அரியலூர்

    அரியலூர் அருகே உள்ள மண்டையன்குறிச்சியை சேர்ந்த சுந்தரராசு மனைவி வேம்பு(வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் வேம்பு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

    இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா உசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.
    ×