search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman doctor suicide"

    • கோழிக்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சதா ரஹ்மத் பங்கேற்க வந்தார்.
    • அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நடந்த விழாவில் பங்கேற்ற போது திடீரென அலறல் சத்தம் கேட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சதா ரஹ்மத்.

    சதா ரஹ்மத் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நடந்த விழாவில் பங்கேற்ற போது திடீரென அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டது.

    உடனே குடியிருப்பு பாதுகாப்பு ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது இளம்பெண் டாக்டர் சதா ரஹ்மத் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி வெள்ளாயில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண் டாக்டர் சதா ரஹ்மத் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை முத்தியால்பேட்டையில் பெண் டாக்டர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் மணி. இவர் சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி லட்சுமி.

    இவர், புதுவையில் உள்ள பிரெஞ்சு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2-வது மகள் ராதிகா (வயது 24). இவர் வானூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இதற்கிடையே ராதிகா மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஜிப்மரில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ராதிகா பணிக்கு சென்றார்.

    பின்னர் பணி முடிந்து மதியம் வீடு திரும்பினார். திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ராதிகா ஆபரே‌ஷனுக்கு முன்பாக பயன்படுத்தும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசியில் செலுத்தி போட்டுக் கொண்டார்.

    இதில், ராதிகா மயங்கி சாய்ந்தார். மாலையில் பணி முடிந்து வீடு திரும்பிய காயத்ரி லட்சுமி வீட்டில் மகள் ராதிகா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து ராதிகா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×