என் மலர்
நீங்கள் தேடியது "wife chain snatching"
சேலம்:
திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பெஞ்சமின்.
சேலத்தை சேர்ந்த இவரது மனைவி எலிசபெத் சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் இன்று காலை மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை திடீரென பறித்தனர்.
அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து கதறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் 2 பேரும் 3 பவுன் செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இது குறித்து சூரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராபட்டு பகுதியை சேர்ந்தவர் சிவாமணி (வயது 35). இவருக்கும் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி. மகள் சுதாவுக்கும் (28) இடையே கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிவாமணி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் சுதா, கணவரிடம் கோபித்து கொண்டு தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஒரத்தநாடு கடைவீதியில் சுதா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சிவாமணி வந்தார்.கணவரை பார்த்து சுதா அதிர்ச்சி அடைந்தார். அப்போது சிவாமணி திடீரென, மனைவி சுதா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
தனது நகையை கணவரே திருடன் போல் பறித்து கொண்டு ஓடியதை கண்டு சுதா வேதனை அடைந்தார். ‘திருடன்.. திருடன்..’ என்று சத்தம் போட கூட முடியாமல் திடுக்கிட்டு போய் நின்றார்.
மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நகை பறிப்பு சம்பவம் பற்றி பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






