என் மலர்
நீங்கள் தேடியது "மனைவியிடம் செயின் பறிப்பு"
காமெடி நடிகர் பெஞ்சமின் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.
சேலம்:
திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பெஞ்சமின்.
சேலத்தை சேர்ந்த இவரது மனைவி எலிசபெத் சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் இன்று காலை மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை திடீரென பறித்தனர்.
அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து கதறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் 2 பேரும் 3 பவுன் செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இது குறித்து சூரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






