என் மலர்
நீங்கள் தேடியது "who sold alcohol was"
- மது பாட்டில்கள் விற்பனை செய்த பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது செல்லியாண்டி அம்மன் பூக்கடை அருகில் 12 மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






